Special
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்
Home/Articles/Notable Figures
Notable Figures

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு

M
M A Mohamed Ali
Author
29 November 2023·👁 1.6k views·4 min read
தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு
M

M A Mohamed Ali

View Profile →

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” எனும் வார்த்தைக்கு “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்” எனும் அழகிய மொழிபெயர்ப்பைத் தந்தவர்.

தினமும் நாம் ஓதகின்ற திருமறைக் குர்ஆனை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்த பேரறிஞர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்?

உங்கள் பொன்னான நேரத்தில் கொஞ்சத்தை ஒதுக்கி வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் திருமறைக் குர்ஆன் அருளப்பட்டு 13 நூற்றாண்டுகளாக தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு குர்ஆனின் தமிழாக்கம் கிடைக்கப் பெற‌வில்லை என்பது ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆம் அன்றைய கால கட்டத்தில் திருக்குர்ஆனை பிரிதொரு பாஷைக்கு மொழியாக்கம் செய்வதே பாவம் எனும் கொள்கையில் தமிழக உலமாக்கள் இருந்தார்கள். அந்த அறியாமையை உடைத்து அல்லாஹ்வின் வேதத்தை தமிழ் பேசும் பொதுமக்களிடம் தூய தமிழில் கொண்டு வந்தவர் தான் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.

    1. 1876ம் ஆண்டு பிறந்த அறிஞர் அவர்கள் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அறபிக் கல்லூரியில் சேர்ந்து முதல் அணியில் மெளலவி பட்டம் பெற்றவராவார். 1906ம் ஆண்டு மெளலவி பட்டம் பெற்றவுடன் சுயமாகத் தொழில் செய்ய ஆரம்பித்தார்கள்.

அந்தத் தொழிலின் மூலம் கிடைத்த வருமானத்தில் “இஸ்லாமிய நூல் பிரசுரச் சங்கம்” எனும் பெயரில் ஒரு அச்சகத்தை நிறுவினார்கள். அந்த அச்சகத்தின் மூலம் பல இஸ்லாமிய நூற்களை வெளியிட்டார்கள். 1926ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் திகதி ஜும்ஆத் தொழுகைக்குப் பின்னர் திருக்குர்ஆனை தமிழாக்கம் செய்யும் உயர்ந்த பணியைத் துவக்கினார்கள்.

மூன்றாண்டு காலம் இடைவிடாத உழைப்பின் பின்னர் திருக்குர்ஆன் முதல் பாகத்தின் மொழி பெயர்ப்பு அரபி மூலத்துடனும் விரிவுரையுடனும் 19.02. 1929ம் ஆண்டு வெளி வந்தது. தான் மொழி பெயர்த்த குர்ஆனை எடுத்துக் கொண்டு அல்லாமா அப்துல் ஹமீது ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எல்லா அரபி மத்ரஸாக்களும் பிரயாணம் செய்தார்கள். தனது மொழி பெயர்ப்பில் பிழை இருந்தால் சொல்லுங்கள் என ஒவ்வொரு மத்ரஸாவையும் நிர்ப்பந்தித்தார்கள். திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு வரலாற்றில், இப்படி ஒரு பரந்த முயற்சி நடந்ததாக நான் அறியவில்லை.

“காபிர்களின் பாஷையான தமிழுக்கு வேதத்தை மொழி மாற்றம் செய்யக் கூடாது” எனும் மெளட்டீகத்தில் வாழ்ந்த அன்றைய உலமாக்கள், அல்லாமா அவர்களின் தியாகத்தையும், தூர நோக்கையும் கண்டு வியந்து போனார்கள் என்றே சொல்லலாம்.

ஆனாலும் ஆலிம்களின் சதியும் பொறாமையும் அல்லாமாவைத் தொடரவே செய்தன‌. அதன் பயனாக அல்லாமா அவர்களின் மொழியாக்கத்தின் முதல் பாகம் வெளியிடப்பட்ட பிறகு, சமுதாயம் கவலைப்பட்டு கண்ணீர் வடிக்கும் வகையில் “இஸ்லாமிய நூல் பிரசுரச் சங்கம்” எனும் அவர்களின் அச்சகம் செயலிழந்து போனது. அறிஞர் அவர்களுக்கு அன்றைய அறிவிலிகள் “வஹ்ஹாபி” எனும் பட்டப் பெயரைச் சூட்டி அவர்களைத் தூற்ற ஆரம்பித்தார்கள்.

(இஸ்லாமிய கருத்துப் புரட்சி செய்யும் நன்மக்கள் இவ்வாறு தூற்றப்படுவது வழக்கமானது) தாம் மேற்கொண்ட அறப்பணியை நிறைவுக்குக் கொண்டு வருவதில் அல்லாமா அவர்கள் எண்னற்ற சோதனைகளைச் சந்தித்தார்கள். 1938ம் ஆண்டு வரை தமிழக உலமாக்கள் தக்க காரணமின்றி அல்லாமாவின் தர்ஜமாப் பணியை எதிர்த்து வந்தார்கள்.

இந்தக் கால கட்டத்தில் தமிழகத்திற்கு விஜயம் செய்த மார்க்க அறிஞர் ஷைகு அப்துல் காதிர் ஹழரத் என்பவர், பாகவி அவர்களை ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்று நிஜாம் மன்னரின் மாமனாராகிய நவாப் நஸீர் யார் ஜங் பஹாத்தூருக்கு அறிமுகப்படுத்தினார்.

நவாப் ஸாஹிபின் பரிந்துரையால் மொழி பெயர்ப்பு மீண்டும் வெளி வரத் துவங்கியது. தனது மொழி பெயர்ப்புப் பணிக்கு பணம் தேவைப்பட்ட பொழுது அல்லாமா அப்துல் ஹமீது ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இலங்கைக்கு வந்து தன்னந்தனியாக வசூல் செய்ய ஆரம்பித்தார்கள்.

அந்நாட்களில் கொழும்பு மாநகரில் வணிகப் பிரமுகராகவும் வழக்கறிஞருமாகத் திகழ்ந்த என்.எம்.எம் ஹனீபா அவர்கள் இதற்கான முழுத் தொகையையும் கொடுத்திட முன் வந்தார்கள். (அல்லாஹ் அன்னாரின் கப்ரை விசாலமாக்குவானாக!) அதன் பயனாக பாகவீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் தமிழாக்கம் முப்பது ஜுஸ்உகளும் “தர்ஜமதுல் குர்ஆன் பி அல்தஃபில் பயான்” எனும் பெயரில் முழுமையாக வெளி வர ஆரம்பித்தது. தர்ஜமாவுக்கு எதிராக ஆரம்பத்தில் போர் கொடி தூக்கியவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

பின்னர் மொத்த சமுதாயமும் மொழி பெயர்ப்பை ஒப்புக் கொள்ள ஆரம்பித்தது. கடுமையாக எதிர்த்த உலமாக்கள் அல்லாமாவின் மொழி பெயர்ப்பை விலை கொடுத்து வாங்கி வாசிக்க ஆரம்பித்தார்கள். தனது 17ம் வயதில் அல்லாஹ்வின் வேதத்தை தமிழாக்கம் செய்ய வேண்டுமென ஆசைப்பட்ட அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஆசை அன்னார் 70 வயதை அடைந்து விட்ட பொழுதே முழுமையாக நிறைவேறியது. சுப்ஹானல்லாஹ்! அன்னாரின் இடை விடாத முயற்சியும், தஃவாக் களத்தில் சோதனைகளைக் கண்டு அசராத தைரியமும் எம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது.

அல்லாமா அவர்கள் அல்லாஹ்வின் வேதத்திற்காக அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டு அவரே மொழி பெயர்த்த தர்ஜமாவுக்கு அவரே வசூல் செய்து அவரே பிரிண்ட் பண்ணி அவரே விற்ற அந்த முயற்சியும் புரட்சியுமானது மொழியாக்கத்துறையில் ஒரு சாதனையாகவே பார்க்கப்பட வேண்டியதாகும்.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விடயமும் இருக்கின்றது. அதாவது இன்று “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” எனும் வார்த்தைக்கு “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்” என அதிகமானோர் அர்த்தம் செய்வதை நாமனைவரும் நன்கறிவோம்.

உலமாக்கள் உட்பட யாரும் இதில் விதி விலக்கில்லை. ஆனால் இந்த அழகிய மொழி பெயர்ப்பை முதன் முதலில் செய்தவர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தான் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாகும். தனது வாழ்நாளை அல்லாஹ்வின் வேதத்தை மொழியாக்கம் செய்வதிலும், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஐம்பது லட்சம் மக்களுக்கு அந்த மொழி பெயர்ப்பைக் கொண்டு போய்ச் சேர்ப்பிப்பதிலும் தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த அந்தப் பேரறிஞரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

அன்னாரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து சமுதாயக் காவலர்களுக்கு படிப்பினையைத் தந்தருள்வானாக! அல்ஹம்துலில்லாஹ்! -மௌலவி ஸஹ்ரான் (மாஸ்ஊதி) பின்குறிப்பு: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் மகனார்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முன்னால் மாநிலத் தலைவர் சிராஜுல் மில்லத், AKM.அப்துஸ் ஸமத் அவர்கள்.

📷 Photo Gallery

Use arrows to browse · Click to view full size

Photo 1
⛶ Fullscreen
1.6kviews
4 min read read
📅29 November 2023
M
M A Mohamed Ali
29 November 2023
← Back to Articles
Reactions
Advertisement

💬 Comments

Loading comments…

Leave a Comment

0/1000

Comments are reviewed before appearing · No account required

© 2026 SL Muslim History · Designed by Akita Digital Innovation

Privacy PolicyTerms of Use