Mabrook UL
View Profile →இலங்கையில் பணியிலிருந்த போது - உயிரிழந்த முதலாவது பொலிஸ் உத்தியோகத்தர் சபான் என்றும், அவர் ஒரு மலாய் முஸ்லிம் என்பதையும் - எனது முன்னைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்.
1864ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் திகதி, சரதியல் என்பவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் சென்ற போது, சரதியலின் நண்பர் மம்மலே மரிக்கார் - பொலிஸாரை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சபான் உயிரிழந்தார்.
உத்துவன் கந்தே சரதியல் என்பவரும் மம்மலே மரிக்காரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் அப்போதைய பிரித்தானிய🇬🇧 காலனித்துவ அரசுக்கு எதிராகப் போராடினார்கள். இவர்கள் - பிரித்தானிய🇬🇧 ஆட்சியாளர்கள் மற்றும் செல்வந்தர்களிடமிருந்து பொருட்கள், பணத்தை கொள்ளையிட்டு, அவற்றை ஏழை மக்களுக்குக் கொடுத்தார்கள் என்றும், அதனால், 'சிலோன் ரொபின் ஹுட்' என்று, சரதியல் அழைக்கப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் இவர்களைக் கைது செய்வதற்கு உதவும் நபர்களுக்கு - சன்மானம் வழங்கப்படும் என்று, அப்போதைய அரசு அறிவித்தது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு,1864ஆம் ஆண்டு மே மாதம் 07ஆம் திகதி, ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையைில், கண்டி போகம்பர சிறை்சாலை வளாகத்தில் வைத்து தூக்கிலிடப்பட்டனர்.
இலங்கையில் மக்கள் முன்னிலையில், இறுதியாக நடந்த தூக்கு தண்டனை இதுதான். (படங்கள்: சரதியல் மற்றும் மம்மலே மரிக்கார்; அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை சித்தரிக்கும் சிலைகள் - காத்தான்குடி நூதனசாலையில் எடுக்கப்பட்டவை)
📷 Photo Gallery
Use arrows to browse · Click to view full size






